முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை

Saturday, August 29, 2009

இந்தியஅரசு நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது ஊழல்.


இந்தியாவின் உயர் தொழில்நுட்பக் கல்வியை நிர்வகிக்கும் ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. சில வாரங்களுக்கு முன்பு சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு இந்தப் புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நடந்து முடிந்த சில நாள்களில் ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சிபிஐ பிடியில் சிக்கினார். கடந்த சில காலமாகவே செய்தித்தாள்களைப் புரட்டினால், ஊழல் புகாரில் சிக்கிக் கொண்ட பெருந் தலைகள் பற்றிய செய்திகள்தான் அதிகமாகத் தென்படுகின்றன.


தேசத்தின் வளத்தை ஒருகூட்டம் இப்படிச் சுரண்டிக் கொண்டிருக்கும்போது, சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கவில்லை என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேருக்குத்தான் முறையான, தரமான நோய்த்தடுப்பு வசதிகள் கிடைக்கின்றன என ஓர் ஆய்வு கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் இந்தியா வந்த பில்கேட்ஸ், "உலகின் மிகவும் தரமற்ற மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று' என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். அவர் இப்படிக் கூறும்போது பிரதமரும் உடன் இருந்தார்.


இது போதாதென்று, அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சேற்றைவாரி வீசிக்கொள்ளும் நகைச்சுவைச் செய்திகளும் பத்திரிகைகளில் பக்கம் தவறாமல் இடம்பிடிக்கின்றன. மழை பெய்யாமல் வறட்சி ஏற்படும் என்கிற கவலையைப் போக்கும் வகையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நல்ல சேதிதான். ஆனால், இந்த மழையால் வீடுகள் நீரில் மூழ்குவதையும், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லையே. மழை பெய்யாவிட்டால் பிரச்னை; பெய்தால் பெரிய பிரச்னை. இதுபோன்ற செய்திகள் மட்டும் செய்தித்தாள்களை ஆக்கிரமித்திருப்பது, நல்ல விஷயங்களே நாட்டில் நடக்கவில்லையா என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.


ஊழல்வாதிகள் பிடிபடுவதற்கும், மழைநீரில் வீடுகள் மூழ்குவதற்கும், மருத்துவ வசதிகள் தரமற்றுப் போனதற்கும் தொடர்பில்லை என்று நினைத்தால் அது தவறு. இந்த மாதிரியான செய்திகள் ஒன்றைத் தெளிவாக்குகின்றன. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நாட்டின் புதிய விதிமுறைகளாக மாறிவிட்டன என்பதுதான் இந்தச் செய்திகள் நமக்குச் சொல்லும் சேதி.


ஏஐசிடிஇ தலைவரின் ஊழல் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். 1987-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு ஏஐசிடிஇ. தொழில்நுட்பக் கல்வியை நாடு முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்பின் மரியாதை கட்டெறும்பு ஊர்ந்த சுவராகத் தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துகளை வாரி வழங்கியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தாலே இந்த அமைப்பு எவ்வளவு "நேர்மையாக' நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும்.


கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்று கூறுவதுதான் லேட்டஸ்ட் ஜோக். அரசியல்வாதிகளும் பெரிய பதவியில் இருப்போரும் பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். நன்கொடை வசூலிக்கக் கூடாது என இவர்களுக்கு யார் உத்தரவு போடுவது? இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பும் ஊழலின் கூடாரமாகிப் போய்விட்டால் குறைகளை யாரிடம்தான் போய்க் கூறுவது?


அடுத்தது பூட்டா சிங் கேஸ். எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் இவர். ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக இவரது மகன் பிடிபட்டார். இதற்காகப் பூட்டா சிங் கொஞ்சமும் பதறவில்லை. தம்மீது ஊழல் பழி சுமத்துவது இது முதல்முறையல்ல என்றார். இது தமக்குக் கிடைத்த பெரிய மரியாதை என்றும் கூறினார். இன்னும் எத்தனை ஊழல் புகார்களில் சிக்கினாலும் இதையேதான் இவர் திரும்பத் திரும்பக் கூறப்போகிறார்.


அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது ஊழல். எல்லாக் காலகட்டத்திலும் இது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது. முகலாயர் காலத்திலேயேகூட கடைநிலை நிர்வாகத்தில் ஊழல் இருந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் ஊழல் இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் ஊழல் என்பது ஒரு விதியாக இருக்கவில்லை. இப்போது எல்லா நிலையிலும் ஊழல் ஓர் எழுதப்படாத சட்டமாகவே மாறியிருக்கிறது. இது தெரியாத அல்லது மதித்து நடக்காத அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முட்டாள்களாகவே கருதப்படுகின்றனர்.


பிறந்த குழந்தைகளுக்கு சில ஆண்டுகள்வரை நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பது சமூகத்தின் மிக அடிப்படையான தேவை. மிக மோசமான ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகள்கூட நோய்த் தடுப்பு மருந்துத் திட்டங்களை நூறு சதவீதம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலோ வெறும் 50 சதவீதம் பேருக்குத்தான் நோய்த்தடுப்பு மருந்துகள் சென்றடைகின்றன.


60 ஆண்டு கால இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் தோல்வி இது. இந்த விஷயத்துக்கு ஊடகங்கள் பெரிய முக்கியத்துவம் தராமல் போனது அதைவிட வேதனை. பில்கேட்ஸ் இதைச் சொன்னார் என்பதால்தான் இந்த அளவுக்காவது இந்த விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது.


கல்வி கற்கும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பவைதான் இதன் முக்கிய நோக்கங்கள்.


கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் "கடுமையான நடவடிக்கைகள்' போல இந்தச் சட்டமும் அமலாக்கப்பட்டால், நோக்கங்கள் எதுவும் நிறைவேறாது.


உண்மையில், விடுதலையடைந்த புதிதில் உலக அளவில் கல்வி கற்கும் உரிமையைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியதே இந்தியாதான். சொந்த நாட்டுக்குள் அதைக் கொண்டுவருவதற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.


நாடு முன்னேற வேண்டுமானால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊழல், நிர்வாகச் சீர்கேடு, வளர்ச்சியில் தேக்கம், வருவாய் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுச் சுகாதாரம், தொடக்கக் கல்வி, ஊழல் ஒழிப்பு, கட்டமைப்பு போன்றவற்றில் கவனத்தைத் திருப்ப வேண்டும். விடுதலையடைந்தபோதே இவற்றுக்குத்தான் அரசுகள் முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஏனோ அது நடக்கவில்லை. இப்போதாவது தொடங்க வேண்டும். பெரிய தாமதமில்லை

Wednesday, August 12, 2009

மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: மின்னணு எந்திர வாக்குப்பதிவை மென்பொருள் புரோகிராம்கள் மூலம் எளிதாக மாற்ற முடியும். அதில் பதிவான ஓட்டுக்களையும் நமக்கு சாதகமாக மாற்ற முடியும் என அமெரிக்க கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்ட நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டின. தமிழகத்தில் அதிமுக, மதிமுக, பாமக இந்த கருத்தை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இவர்களின் கருத்துக்கு ஆதரவு சேர்ப்பது போல அமெரிக்க கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கலிபோர்னியா, சான் டீயாகோ, மெக்சிகன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று மின்னணு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

தற்போது அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதாகவும், ஒரு மென்பொருள் புரோகிராம் மூலம் ஒருவருக்கு விழுந்த ஓட்டுக்களை வேறு ஒருவருக்கு மாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்த குழுவில் இடம்பெற்ற சான் டீயாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ஹோவவ் சாஜெம் கூறுகையில்,

வாக்குப்பதிவு எந்திரம் என்பது தன் வாழ்நாள் முழுவதும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது உள்ள எந்திரங்கள் நாங்கள் எழுதிய மென்பொருள் புரோகிராமுக்கு அடிபணிந்துவி்ட்டது.

இந்த ரிடர்ன் ஓரியன்டட் புரோகிராம் மூலம் ஒருவர் மின்னணு எந்திரத்தை தன்வசப்படுத்தி ஓட்டுக்களை மாற்றிவிடலாம். இந்த ஆராய்ச்சியை நாங்கள் மின்னணு எந்திரத்தின் புரோகிராம் மூலத்தை பெறாமல் அதை தகர்த்துள்ளோம்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் காகிதத்தை பயன்படுத்தும் பழைய வாக்குச் சீட்டு முறை தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். ஆப்டிக்கல் ஸ்கேனர்களை கொண்ட வாக்கு சீட்டு முறை மிக சிறந்ததாக இருக்கும் என கருதுகிறோம்.

ஆனால், வாக்குச்சீட்டு முறையின் மூலம் தேர்தல் நடத்துவது செயல்முறைக்கு சற்று கடினமானது தான் என்றார்.

Wednesday, July 29, 2009

அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை முழு பலத்துடன் எதிர்ப்போம் - தா.பாண்டியன்

ஸ்ரீவைகுண்டம்: அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை இந்திய கம்யூ கட்சி முழு பலத்துடன் எதிர்க்கும் என்று தா. பாண்டியன் கூறினார்.ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தனலெட்சுமியோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வந்த இ.கம்யூ கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இந்திய கம்யூ கட்சி தனது பிரசாரத்தை தொடங்கி விட்டது. எங்கள் கட்சி தொடக்கம் முதலே பிரச்சாரம் தொடங்கி விட்டது. உழைக்கும் மக்களுக்காக இ.கம்யூ கட்சி தொடர்ந்து போராடும். இன்றைய பிரச்சனைகளை மக்களிடம் கூறி எங்களுக்கு வாக்கு கேட்போம். எங்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கினால் சட்டமன்றத்தில் இப்பகுதி மக்கள் பிரச்சனை குறித்து குரல் எழுப்புவோம். திமுக, காங் கட்சிக்கு எதிராக அளிக்ககப்படும் வாக்குகளையும், அதிமுக வாக்குகளையும் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.தொடர்ந்து அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. திமுகவுடன் கூட்டணி என்பது பற்றி முடிவு இல்லை. பண பலம், அத்துமீறல், அதிகார பலம் போன்றவைகளை இத்தொகுதியில் முழுபலத்துடன் எதிர்ப்போம் என்றார்.

Monday, July 27, 2009

பிரசாரத்திற்கு அதிமுக தலைவர்களை அழைக்க மாட்டோம்- தா.பாண்டியன்



கோவை: இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு அதிமுக தலைவர்களை அழைக்க மாட்டோம். தனித்தே செயல்படுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

கோவையில் நடந்த சிபிஐ மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாண்டியன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் நடைபெறும் 5 சட்டசபை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஒரு தொகதியை ஆதரவு கட்சிக்கு விட்டுக்கொடுக்கின்றோம்.

இடது சாரிகள் கருத்தை ஆதரிக்கின்ற பார்வர்டு பிளாக் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து களத்தில் இறங்கியுள்ளோம்.

ஆளுங்கட்சி செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து 4 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

பர்கூர் தொகுதிக்கு நாளை (இன்று) வேட்பாளரை அறிவிக்கிறோம். இடைத்தேர்தலில் .தி.மு..வினர் வாக்களிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும். .தி.மு..வினருக்கும் எங்களுக்கும் இடையே முரண்பாடு எதுவும் இல்லை.

இடைத் தேர்தல் பிரசாரத்தை இடதுசாரிகள் தனித்தே மேற்கொள்வார்கள், தனித்தே செயல்படுவார்கள். அதிமுக தலைவர்களை பிரசாரத்திற்கு அழைக்க மாட்டோம் என்றார் தா.பாண்டியன்.

Thursday, July 23, 2009

செயற்கைக்கோளை ஏவியது வெனிசுலா: சாவேஸ் பெருமிதம்!

சீன உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்ட வெனிசுலாவின் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக சுற்றத் துவங்கியது.

தென் அமெரிக்க விடுதலையின் நாயகன் என்று அழைக்கப்படும் சைமன் பொலிவாரின் பெயரை அந்த செயற்கைக்கோளுக்கு வெனிசுலா அரசு சூட்டியது. 15 ஆண்டு காலம் விண்ணை வலம் வரவிருக்கும் இந்த செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான திட்டம் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

அனைத்து தென் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியத்தீவு நாடுகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும். தொலைத்தொடர்புத்துறையில் பெரும் அளவு மாற்றத்தை இந்த செயற்கைக்கோள் ஏற்படுத்தும் என்று வெனிசுலா தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நூரிஸ் ஓரிலா கூறியுள்ளார்.

வெற்றிகரமாக செயற்கைக்கோள் ஏவப்பட்டபிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ், பணம் பண்ணுவதற்காக முதலாளித்துவவாதிகள் செயற்கைக்கோள்களை ஏவுவார்கள். எங்கள் விடுதலையைப் பறைசாற்றுவதற்காகவே நாங்கள் இந்த செயற்கைக்கோளை ஏவியுள்ளோம்.

தென் அமெரிக்க மற்றும் கரீபிய மக்களுக்கு இந்த செயற்கைக்கோளை அர்ப்பணிக்கிறோம். முழுசுதந்திரத்தை நோக்கி செல்வதற்கான நடவடிக்கையாகவே இதைச் செலுத்தினோம். செயற்கைக்கோள் ஏவுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரியதை சீனா நிராகரித்தது நல்ல அம்சம் என்று கூறினார்.

தனது சொந்த உபயோகத்திற்காக 2013 ஆம் ஆண்டு மற்றொரு செயற்கைக்கோளை வெனிசுலா செலுத்த உள்ளது. சீன மண்ணிலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் 36 ஆயிரம் கி.மீ. தொலையில் பூமியை வலம் வரும். தெற்கு மெக்சிகோவிலிருந்து அர்ஜெண்டினாவின் தெற்குப்பகுதி வரை இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செயற்கைக்கோள் ஏவப்பட்டதை தொலைக்காட்சிகள் மூலம் சாவேஸ் பார்த்தபோது அவருடன் பொலிவியாவின் ஜனாதிபதி இவோ மொரேல்சும் இருந்தார்.

இடைத் தேர்தலில் கம்யூ. போட்டி



சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. நாளை திருச்சியில் இரு கட்சிகளும் இதை முறைப்படி அறிவிக்கவுள்ளன.

இந்த முடிவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தெரிவிக்கவும், இடைத் தேர்தல் புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்றும் கோரவும் அக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதை ஜெயலலிதா ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிட அந்தக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதன்மூலம் அதிமுக கூட்டணி பிளவுபடுவது உறுதியாகிவிட்டது.

அதிமுக தேர்தல் புறக்கணிப்பு முடிவை ஏற்று நாமும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்கள் நேற்று சென்னையில் தனித் தனியாக நடந்தன.

பின்னர் இரு கட்சிகளின் தலைவர்களும் சிபிஐ அலுவலகத்தில் சந்தித்து இடைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்தனர்.

தேமுதிக ஆதரவைக் கோர முடிவு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது, இதை ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தெரிவித்து அவரது முடிவைக் கைவிடுமாறு கோருவது, அது சரிவராவிட்டால் தனித்துப் போட்டியிடுவது, தேவைப்பட்டால் தேமுதிகவுடன் பேச்சு நடத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவது என தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும் நேற்றைய முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் நாளை எங்களது கட்சியின் செயற்குழு நடைபெறுகிறது. அப்போது முடிவு எடுக்கப்படும் என்றார்.

அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாளை திருச்சியில் செயற்குழுவைக் கூட்டியுள்ளது. அப்போது முடிவு எடுக்கப்படும்.

இடதுசாரிகளின் திட்டம் இதுதான்...

- இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நேரில் சென்று தெரிவித்து அவரையும் முடிவை வாபஸ் பெறச் செய்யுமாறு வலியுறுத்துவது.

-
ஜெயலலிதா மறுத்து விட்டால் ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுவது. ஐந்து தொகுதிகளிலும் தங்களுக்கு ஆதரவு மட்டும் தருமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொள்வது.

-
சிபிஐ பர்கூர், ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிடும். மார்க்சிஸ்ட் கட்சி மீதமுள்ள இளையாங்குடி, தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளில் போட்யிடுவது.

-
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நிறுத்துவது.

-
தேவைப்பட்டால் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்தும் பரிசீலனை. இதுதொடர்பாக விஜயகாந்த்தையும் சந்தித்துப் பேசுவது.

இத்தனையும் குறித்து நாளை நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் இரு கட்சிகளும் முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கவுள்ளன.

ஜெயலலிதாவின் முடிவை சிபிஐ ஏற்க முன்வந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்றே தெரிகிறது. தேசிய அளவில் இரு கட்சிகளும் ஒரே அணியில் இருப்பதால் சிபிஎம் வழியில் செல்லும் முடிவையே சிபிஐ எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Monday, July 20, 2009

தேர்தல் புறக்கணிப்பு முடிவு: கூட்டணி கட்சிகளை 'புறக்கணித்த' அதிமுக

குன்னூர்: தமிழகத்தில் இடைத் தேர்தல்களை புறக்கணிப்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவில்லை. அதிமுக தன்னிச்சையாகவே இந்த முடிவை எடுத்துள்ளது.

அதிமுக அவசர செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா,

தமிழகத்தில் 5 தொகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களை புறக்கணிப்பதாக தீர்மானிக்கப்பட்டு, அதிமுக செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடைத் தேர்தல்களை புறக்கணிக்கும் முடிவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே இந்த முடிவை அவரிடம் தெரிவித்துள்ளதால், தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த முடிவை அவரும் ஏற்பார் என்று நம்புகிறேன்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கும் தெரிவிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

இதன்மூலம் தேர்தல் புறக்கணிப்பு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் அவர் விவாதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

முதல் முறையாக புறக்கணித்த ஜெ..



சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலை முதல் முறையாக புறக்கணித்துள்ளார் ஜெயலலிதா.

இதற்கு முன் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

அப்போது திமுக-காங்கிரஸ் ஓரணியாகவும், அதிமுக எதிரணியிலும் இருந்தது. இந் நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் எம்.எல்.. ஆக இருந்த தொகுதியில், இன்னொரு காங்கிரஸ் கட்சிக்காரர்தான் இடைத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறிய எம்.ஜி.ஆர்., காங்கிரஸ் வேட்பாளர் அருணகிரி என்பவருக்கு ஆதரவாகப் பிரசாரமும் செய்தார