வாஷிங்டன்: மின்னணு எந்திர வாக்குப்பதிவை மென்பொருள் புரோகிராம்கள் மூலம் எளிதாக மாற்ற முடியும். அதில் பதிவான ஓட்டுக்களையும் நமக்கு சாதகமாக மாற்ற முடியும் என அமெரிக்க கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்ட நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டின. தமிழகத்தில் அதிமுக, மதிமுக, பாமக இந்த கருத்தை வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் இவர்களின் கருத்துக்கு ஆதரவு சேர்ப்பது போல அமெரிக்க கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கலிபோர்னியா, சான் டீயாகோ, மெக்சிகன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று மின்னணு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
தற்போது அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதாகவும், ஒரு மென்பொருள் புரோகிராம் மூலம் ஒருவருக்கு விழுந்த ஓட்டுக்களை வேறு ஒருவருக்கு மாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த குழுவில் இடம்பெற்ற சான் டீயாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ஹோவவ் சாஜெம் கூறுகையில்,
வாக்குப்பதிவு எந்திரம் என்பது தன் வாழ்நாள் முழுவதும் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது உள்ள எந்திரங்கள் நாங்கள் எழுதிய மென்பொருள் புரோகிராமுக்கு அடிபணிந்துவி்ட்டது.
இந்த ரிடர்ன் ஓரியன்டட் புரோகிராம் மூலம் ஒருவர் மின்னணு எந்திரத்தை தன்வசப்படுத்தி ஓட்டுக்களை மாற்றிவிடலாம். இந்த ஆராய்ச்சியை நாங்கள் மின்னணு எந்திரத்தின் புரோகிராம் மூலத்தை பெறாமல் அதை தகர்த்துள்ளோம்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் காகிதத்தை பயன்படுத்தும் பழைய வாக்குச் சீட்டு முறை தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். ஆப்டிக்கல் ஸ்கேனர்களை கொண்ட வாக்கு சீட்டு முறை மிக சிறந்ததாக இருக்கும் என கருதுகிறோம்.
ஆனால், வாக்குச்சீட்டு முறையின் மூலம் தேர்தல் நடத்துவது செயல்முறைக்கு சற்று கடினமானது தான் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment